தேர்வு எழுத வந்த பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம்.! வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, அரசுப் பள்ளியில் படித்து வருபவர் 17 வயதுடைய 12ஆம் வகுப்பு மாணவி. இவர் தஞ்சாவூர் மாவட்டம் சத்துவாச்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (21) என்பவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வீடியோவிற்கு பதில் போட்டு வந்துள்ளார். இதன் மூலமாக இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி, தேர்வு எழுதுவதற்காக வந்த பிளஸ்-2 மாணவியை பார்க்க வந்த செல்வம், மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். இதையடுத்து தேர்வு எழுதச் சென்ற மகள் வீட்டிற்கு வராததால் பெற்றோர் பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால் மாணவி கிடைக்காததால் இதுகுறித்து ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், செல்வம் மாணவியை செல்வம் கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவியை மீட்ட போலீசார், பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A youth arrested for kidnapped and married a plus 2 girl in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->