திருவண்ணாமலை தீபத் திருவிழா :: ஆன்லைன் டிக்கெட் பெற ஆதார் எண் கட்டாயம்..!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். அதேபோன்று திருவண்ணாமலைக்கு டிசம்பர் 5, 6, 7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்தது.

இந்த நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் காண நாளை ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 6ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் காண 500 ரூபாய் கட்டணத்தில் 500 டிக்கெட்டுகளும் அதே நாள் மாலை 6 மணிக்கு மகா தீபம் காண்பதற்கு 600 ரூபாய் கட்டணத்தில் 100 டிக்கெட்டுகளும், 500 ரூபாய் கட்டணத்தில் 1,000 டிக்கெட்டுகளும் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு முதல் டிக்கெட்களை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட் பெற விரும்புவோர் http://annamalaiyar.hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆதார் எண், கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கட்டாயம் பதிவு செய்து டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் தீப திருவிழா பற்றி விவரங்களுக்கு 1800 425 3657 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadhaar number mandatory Online ticket booking for Deepam tickets


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->