பள்ளிகள் திறப்பு - நடத்துனர்களுக்கு போக்குவரத்துக்கு கழகம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் ஆறாம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கவுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பேருந்துகளில் பயணிப்பதற்கான கட்டணமில்லா பயண அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், போக்குவரத்துத் துறையால் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கும் வரை அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பழைய அடையாள அட்டையை பேருந்து நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம்.

இந்த நடவடிக்கை தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட மாணவர்களுக்கும் பொருந்தும். இது தொடர்பாக பேருந்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை மீறி சீருடையில் உள்ள மாணவர்களை அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டால், நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

action against conductor for school students step down from bus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->