சேலத்தில் வலம் வந்த அல்டிமேட் ஸ்டார்.! வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அல்ட்டிமேட்ஸ்டார் அஜித் குமார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், வலிமை, பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இதற்கிடையே நடிகர் அஜித் குமார் படப்பிடிப்பு இடைவெளியின் போது தனது இருசக்கர வாகனத்தில் பயணிப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்துக்கொண்டு  பல்வேறு பகுதிகளுக்கு தனது உயர் ரக இரு சக்கர வாகனத்தில் சென்று வருகிறார். 

இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நேற்று சேலத்திலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உத்தம சோழபுரம் அருகே தனது உயர் ரக பைக் ஓட்டி சென்றதை ரசிகர்கள் பார்த்து உற்சாகமடைந்தனர். 

அப்போது, அவர் திடீரென இருசக்கர வாகனத்தை நிறுத்து விட்டு ரசிகர்களிடம் சகஜமாக பேசியுள்ளார். அதன் பின்னர் அவர் அங்கிருந்தவர்களுக்கு கையசைத்தவாறு தனது பயணத்தை தொடங்கினார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor ajith bike ride in salem photos viral


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->