நடிகர் அல்லு அர்ஜுன் கைது! மனைவிக்கு முத்தமிட்டு காவல்நிலையம் சென்ற வீடியோ வைரல்!
Actor Allu Arjun Arrested
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற கவிதா (வயது 35) கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். அவரின் 8 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் மீது 105, 118 (1) என்ற பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்த ஹைதராபாத் போலீசார், இன்று அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அல்லு அர்ஜுனிடம், ஹைதராபாத் சிக்கட்பாளி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் இழப்பீடாக தர உள்ளதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Actor Allu Arjun Arrested