மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தாரா அர்ஜுன்? - நடந்தது என்ன?
actor arjun visit prime minister modi
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். பாஜகவை பலப்படுத்த மக்கள் மத்தியில் பிரபலமானவர்களை அதிலும் குறிப்பாக நடிகர்-நடிகைகளை கட்சியில் இணைப்பது தொடர்பாக பாஜக காய் நகர்த்தி வருகிறது.
இந்த நிலையில், நடிகர் அர்ஜுன் பிரதமர் மோடியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடிகர் அர்ஜுன் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "என்னுடைய கோவிலுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். கூடிய சீக்கிரத்தில் வருவேன் என்று அவரும் சொல்லியிருக்கிறார். அவ்வளவு தான். சும்மா கேஷுவலாகத்தான் சந்தித்து பேசினேன்.
இப்போது, தான் முதல் முறையாக மோடியை சந்திக்கிறேன். எங்களுக்கு ரொம்ப பிடித்த ஒரு மனிதர். எங்கள் வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் மோடியை பிடிக்கும். ரொம்ப பிடித்தமானவர். அவர் இன்று இங்கே வந்திருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே உங்களை சந்திக்க வேண்டும் என்று அப்பாயிண்ட்மண்ட் கேட்டோம். அவரும் கொடுத்துவிட்டார்” என்று தெரிவித்தார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் நடிகர் அர்ஜூன் பாஜகவில் இணைந்துவிட்டார் என்று தகவல்கள் பரவுகிறதே என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லைங்க.. அரசியல் என்பதே எனக்கு அவ்வளவாக தெரியாது” என்று பேசினார்.
English Summary
actor arjun visit prime minister modi