காவலாளியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் பாலா.! புதிய வீட்டை திறந்த ராகவா லாரன்ஸ்! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சி மூலம் சின்னத்திரையில் நகைச்சுவை கலைஞராக அறிமுகமாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பாலா. தற்போது இவர் சினிமாவிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராகவும் வலம் வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், நடிகர் பாலா பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். அதாவது, மருத்துவமனை இல்லாத கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி, ஏழை பெண்களுக்கு ஆட்டோ, வறுமையில் வாடும் இளைஞருக்கு பைக் என தனது சொந்த செலவில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் பாலா தனது வீட்டின் அருகே விளையாட்டு அரங்கின் காவலாளியாக பணிபுரியும் முதியவரின் ஆசையை தனது சொந்த பணத்தில் நிறைவேற்றி, அந்த காவலாளியின் 68-வது பிறந்த நாளுக்கு புதிய வீட்டை பரிசாக அளித்து மகிழ்ந்துள்ளார்.

மேலும், புதுமனை புகுவிழாவிற்கு வருகை தந்த நடிகர் ராகவா லாரன்ஸ், புதிய வீட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கேக் வெட்டி முதியவரின் பிறந்தநாளை கொண்டாடினர். இது குறித்து நடிகர் பாலா பகிர்ந்துள்ள நெகிழ்ச்சிகரமான வீடியோ, பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor bala build house gift to security


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->