மக்களே உஷார்.. இரண்டு நாட்கள் வாங்கிகள் ஸ்டிரைக் அறிவிப்பு!
People beware Two Days Buyers Strike Announcement
முக்கிய கோரிக்கைகள் எவற்றையும் இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக்கொள்ளாததால், திட்டமிட்டபடி வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் ஸ்டிரைக் நடைபெறும் என்று வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகள்,மற்றும் இயக்குனர்கள் உள்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 24 மற்றும் 25-ந் தேதிகளில் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்து இருந்தன.இதையடுத்து வேலைநிறுத்தம் அறிவித்து இருந்த வங்கி சங்கங்களை இந்திய வங்கிகள் சங்கம், ஐக்கிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, வாரத்தில் 5 நாள் வேலையை அமல்படுத்த வேண்டும், பணித்திறனை ஆய்வு செய்தல் மற்றும் பணித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை ஆகிய உத்தரவுகளை திரும்பப்பெற வேண்டும், பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், அதற்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஐக்கிய கூட்டமைப்பு முன்வைத்தது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு கூறியுள்ளது.

மேலும் இந்த பேச்சுவார்த்தை குறித்து பேசிய ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எல்.சந்திரசேகர் முக்கிய கோரிக்கைகள் எவற்றையும் இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக்கொள்ளாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.அதன்படி முக்கிய கோரிக்கைகள் எவற்றையும் இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக்கொள்ளாததால், திட்டமிட்டபடி வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் ஸ்டிரைக் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
English Summary
People beware Two Days Buyers Strike Announcement