ஆருத்ரா மோசடி புகார் || நடிகர் ஆர்.கே.சுரேஷ் அளித்த ஆவணங்கள் ஆய்வு.!! - Seithipunal
Seithipunal


ஆருத்ரா கோல்ட் ரேட் நிறுவனமானது 2438 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் முக்கிய உரிமையாளரான ராஜசேகரை துபாய் நாட்டு போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவரை மீட்டு சென்னை கொண்டு வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மோசடி வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட நடிகரும் பாஜக நிர்வாகியமான ஆர் கே சுரேஷ் தொடர்ச்சியாக துபாயில் தலைமறைவாக இருந்தார் பிறகு அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்னை திரும்பினார்.

அதன் பிறகு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்து வருகிறார் ஆர் கே சுரேஷ். விசாரணையின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கேட்ட ஆவணங்களையும் ஆர்கே சுரேஷ்சமர்ப்பித்துள்ள நிலையில் அனைத்து ஆவணங்களையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

குறிப்பாக ஆர்கே சுரேஷ் அளித்த வங்கி மற்றும் சொத்து ஆவணங்கள் உண்மையா? எனவும்,  சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் விவரங்களை கேட்டு பெறவும் பொருளாதார போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆருத்ரா மோசடி வழக்கில் தொடர்புடைய ரூஷா  உள்ளிட்டோரிடம் மீண்டும் விசாரணை செய்யவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் ஆர்.கே. சுரேஷ்க்கு மீண்டும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor RK Suresh documents analysisin aruthura case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->