அமித்ஷாவிற்கு பதில் நடிகர் சந்தான பாரதி படம் - குழப்பத்தில் பாஜகவினர்.!
actor sandhana barathi photo include in bjp poster
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் செயல்பட்டு வரும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் 56-வது ஆண்டு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு, அவரை வரவேற்பதற்காக மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பா.ஜ.க. சார்பில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமித்ஷாவை வரவேற்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டரில் அமித்ஷாவிற்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் படம் இடம்பெற்றுள்ளது.
இந்தப் போஸ்டர் பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவரின் சார்பில் ஒட்டப்பட்டுள்ளதாக அதே போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பா.ஜ.க.வினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சம்பந்தப்பட்ட பெண் நிர்வாகி இதனை மறுத்துள்ளதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
actor sandhana barathi photo include in bjp poster