மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி நடிகர் சரத்குமார் அங்கப்பிரதிஷ்டம்!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக  போட்டியிட்ட மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி நடிகர் சரத்குமார் அங்கப் பிரதிஷ்டம் செய்துள்ளார்.

நடிகர் சரத்குமார் ஆகஸ்ட் 31 2007 ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து அண்ணா திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வந்தது. மிகுந்த நிலையில் கடந்த மார்ச் 12ஆம் தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அதன் நிறுவனரான நடிகர் சரத்குமார் கட்சியை கலைத்து தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் கட்சியை இணைத்தார்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி  தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் காண வாக்கு பதிவு நடைபெற்றது. அதில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். நடிகை ராதிகா சரத்குமார் ஆதரித்து அவரது கணவர் சரத்குமார் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்ட பலர் பிரச்சாரம் செய்தனர்.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிகளும் நடைபெற்று நிறைவடைந்த நிலையில், நாளை மக்களவை தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமாரின் கணவர் நடிகர் சரத்குமார் மனைவி வெற்றி பெற வேண்டி விருதுநகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் திருக்கோவிலில் நடிகர் சரத்குமார் அங்கப்பிரதிஷ்டம் செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Sarathkumar wishes wife Radhika to win


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->