தவெக தலைவர் விஜய் மீது பரபரப்பு புகார்: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடைபெற்ற நிலையில் அரசியல் கட்சி தலைவர்களும் ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தினர். 

அதன்படி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நேற்று நண்பகல் சென்னை, நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். 

அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. இதனால் விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார். இந்நிலையில் விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். 

அதில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக 200க்கும் மேற்பட்ட நபர்களுடன் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor Vijay against complaint 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->