மாணவர்களுக்கு பாராட்டு விழா - நடிகர் விஜய் வருகை.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 

இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கி, அதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், நடிகர் விஜய் இந்த வருடமும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக பரிசுகளை வழங்க உள்ளார்.

அதில், முதற்கட்டமாக, இன்று திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. அந்த விழாவில், கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்க உள்ளார் .

இந்த நிகழ்வில், 750 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட 3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இன்று மாலை 6 மணி வரை நடைபெறும் இவ்விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு அறுசுவை சைவ விருந்து தயார் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில், திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்துக்கு நடிகர் விஜய் வந்துள்ளார். இந்த விழாவை முன்னிட்டு உதவி ஆணையர் தலைமையில் 30 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக கல்வி விருந்து வழங்கும் விழா நடப்பதால் இந்த விழாவில் விஜய் என்ன பேச இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay come to students appreciation ceremony function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->