புட்ட பொம்மா பாடலுக்கு குழந்தைகளுடன் நடனமாடிய விஜய் - வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


புட்ட பொம்மா பாடலுக்கு குழந்தைகளுடன் நடனமாடிய விஜய் - வைரலாகும் வீடியோ.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருடைய நடிப்பின் திறமையில் மயங்கிய ரசிகர்கள் இவரைத் "தளபதி" என்று உணர்வுபூர்வமாக அழைத்து வந்தனர். 

இந்த நிலையில், நடிகர் விஜய் நேற்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். விஜய்யின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை போஸ்டர் அடித்தும், பேனர்கள் வைத்தும் பிரமாண்டமாகக் கொண்டாடினர்.

அதுமட்டுமல்லாமல், ரசிகர்கள் ரத்ததான முகாம்கள், இலவச உணவு, ஒருநாள் கட்டணமில்லா பேருந்து பயணம் என்று பல செயல்களையும் செய்தனர். 

இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டே, நடிகர் விஜய் 'பீஸ்ட்' படப்பிடிப்பு தளத்தில் குழந்தைகளுடன் 'புட்ட பொம்மா' பாடலுக்கு அழகாக நடனமாடும் வீடியோவை பகிர்ந்து தன்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay dance with childrens butta bomma song vedio viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->