தமிழக பாஜகவில் வெளியேறும் படலம்.. காயத்ரியை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் விலகல்..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை தொடர்ந்து தற்பொழுது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். தமிழக பாஜவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் முன்னாள் தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக 6 மாதம் தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த 3ம் தேதி பாஜகவில் இருந்து நிரந்தரமாக வெளியேறுவதாக அறிவித்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘‘தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு வீடியோ, ஆடியோ கலாசாரம் பாஜகவில் வந்துள்ளது. தமிழக பாஜவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அண்ணாமலை மலிவான பொய் பேசும், அதர்மத்தின் பக்கம் நிற்கும் தலைவராக விளங்குகிறார். நான் பாஜவில் இருந்து விலகுவதற்கு அண்ணாமலையே காரணம். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களே நீங்களே உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

மரியாதை இல்லாத இடத்தில் பெண்கள் தொடர்ந்து இருக்கக்கூடாது. என்னிடம் உள்ள ஆடியோ, வீடியோக்கள் என அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையினரிடம் வழங்கி, அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என்று புகார் அளிப்பேன்’’ என காயத்ரி ரகுராம் பேட்டி அளித்து இருந்தார். இதுகுறித்து அண்ணாமலை இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது "எனது மௌனம் தான் பதில்" என பேசி இருந்தார்.

இந்த நிலையில் மற்றொரு நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது பாஜவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு காரணம் தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் விலகுவதாக தெரிவித்துள்ளார். தமிழக பாஜவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி பெண் நிர்வாகிகள் வெளியேறுவது தேசிய பாஜவில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Lakshmi Ramakrishnan resigned from TNBJP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->