சென்னை : தனியாக இருந்த கல்லூரி மாணவியை கொலை செய்ய முயன்ற பிகாரி வழக்கில் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை அடையாறு குடியிருப்பு பகுதியில், 23 வயது கல்லூரி மாணவி ஒருவரை கொலை செய்ய முயன்ற வடமாநில இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி அடையார் கஸ்தூரிபா நகரின் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி அபயக்குரல் சத்தம் எழுந்தது. அந்த நேரம் பார்த்து அந்த மாணவியின் தாய், அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு சீருடையில் தனியார் காவலாளி தப்பி ஓட முயன்றான்.

அவனை பிடித்த பொதுமக்கள் விசாரணை செய்ததில், அவன் பெயர் நிர்பய் குமார் என்பதும், அவர் பிகர் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. 

மேலும், எதற்காக அந்த மாணவியை தாக்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தியதில், அவன் அந்த மாணவி தனியாக இருப்பதை நோட்டமிட்டு, அவரை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து உள்ளான்.  மாணவி சத்தம் போட்டதால் தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

உடனடியாக அந்த நபரை பிடித்து அடையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து, அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், நிர்பய் குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

adaiyaru college attempt murder case judgement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->