தமிழகம் | அகழாய்வில் முதுமக்கள் தாழியில் 2 எலும்புக்கூடுகள்! தொல்லியல் துறையினர் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!
Adichanallur excavation 2 skeletons old mans tomb found
தூத்துக்குடி மாவட்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் ஆதிச்சநல்லூரில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் சைட் மியூசியம் மத்திய அரசு சார்பில் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதனால் அங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சி சோதனையில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட கல்வட்டத்தில் ஒரு முதுமக்கள் தாழியை தொல்லியல் துறையினர்திறந்து பார்த்ததில், இரட்டை மூடிகளுடன் முதுமக்கள் தாழிக்குள் 2 நபரின் மண்டை ஓடுகள், கை மற்றும் கால் எலும்புகள் போன்றவை இருந்தன.
அதனுடன் சிறு பானைகளும், இரும்பாலான உளியும் இருந்தன. இது குறித்து தொல்லியல் துறையினர் தெரிவிக்கையில், ''முதுமக்கள் தாழியில் இருந்தது மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கணவன்-மனைவியின் எலும்புக்கூடுகளா? அல்லது தாய்- குழந்தையின் எலும்புக்கூடுகளா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது'' என தெரிவித்தார்.
பின்னர் தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கையில், 'புறநானூறு பாடலில் கலம்செய் கோவே, கலம்செய் கோவே' என்ற போரில் கணவர் இறந்ததால், அவரது உடலுடன் தன்னையும் அடக்கம் செய்யுமாறு மனைவி தெரிவித்ததாக உள்ளது. அதனை உணர்த்தும் வகையில், ஒரே முதுமக்கள் தாழியில் 2 எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன' என்று தெரிவித்தனர்.
English Summary
Adichanallur excavation 2 skeletons old mans tomb found