ராஜ்ய சபா தேர்தலுக்காக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அஇஅதிமுக..!
ADMK Announced Rajya Sabha Candidate
ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்.நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் 10.6.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் சுழகத்தின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது சம்பந்தமாக 19.5.2022 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கழக மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை , கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலனை செய்து எடுத்த முடிவின்படி ,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் .
- திரு . C.Ve. சண்முகம் , B.A. , B.L. , அவர்கள்
கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர் விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
- திரு . R. தர்மர் , B.A. , அவர்கள்
முதுகுளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ராமநாதபுரம் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் ST
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ADMK Announced Rajya Sabha Candidate