புயலை கிளப்பிய மத்திய குற்றப்பிரிவு போலீசார்! இபிஎஸ் மீது இத்தனை வழக்குகளா?! உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?
ADMK Edappadi palanisami Case Details 07052023
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது, அதிமுக சார்பில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து தொடர்பான விவரங்களை தவறாக தெரிவித்து உள்ளதாக, தேனியை சேர்ந்த மிலானி என்பவர் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதி முன் ஆஜராகிய சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, காவல்துறை இது குறித்து பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த விவகாரத்தை மேற்கொண்டு பெரிதுப்படுத்த வேண்டாம் என்று காவல் துறையினருக்கு அறிவுறுத்தி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி மீது பதியப்பட்டுள்ள வழக்குகளின் விவரம் :
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 125 ஏ தவறான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வது.
* 125 ஏ (1) பிரிவு 33 ஏ இன் துணைப் பிரிவு தொடர்பான தகவல்களை வழங்கத் தவறியது,
* 125 (2) தனக்குத் தெரிந்த அல்லது தவறானது என்று நம்புவதற்குக் காரணமுள்ள தவறான தகவலைத் கொடுப்பது. * 125(3) பிரிவு 33-ன் துணைப்பிரிவு (1) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
English Summary
ADMK Edappadi palanisami Case Details 07052023