திமுக - பாஜக இடையே ரகசிய உறவு! ராகுல்காந்திக்கு அழிப்பு இல்லை!  - Seithipunal
Seithipunal


கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தில் ஹிந்தியில்தான் பெயர் உள்ளது, அதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏன் எதிர்க்கவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கையில் ,  "திமுக - பாஜக இடையே ரகசிய உறவு உள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு  நாணயத்தில் இந்தி வருகிறது என திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு தெரியும்.

அதற்கு உடன்பட்டுதான் நாணயத்தை வெளியிடுகிறார். தமிழ், தமிழ் என்று மூச்சுக்கு 300 தடவை சொல்கின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைக்கு இந்திக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

ஏனென்றால் அவரின் தந்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் நாணயத்தை வெளியிடுகிறார்கள். இந்த விழாவிற்கு ராகுல்காந்திக்கு ஏன் அழைப்பு இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "விவசாயிகளின் 60 ஆண்டு கால கனவு திட்டமான அத்திகடவு-அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியது எனது தலைமையிலான மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு. இதனை நேற்றைய தினம் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார்கள்,

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் 90% பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. பாக்கி இருந்த 10% பணிகளை திமுக அரசால் 6 மாத காலத்தில் நிறைவு செய்திருக்க முடியும். ஆனால் அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் 3 ஆண்டு காலம் கிடப்பில் போடப்பட்டு தற்போது முடித்திருக்கிறது.

அத்திக்கடவு - அவிநாசி திட்ட பணிகளை நிறைவேற்றாத இந்த 2.5 ஆண்டு காலம் விவசாயிகளுக்கு நீர் கிடைக்காமல் இருந்ததற்கு திமுக அரசு தான் காரணம். திமுக ஆட்சி அமைத்தது முதல் இதுவரை ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை” என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi Palanisamy Say About DMK and BJP Rahulgandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->