அஜித்குமாரை பாராட்டி எடப்பாடி பழனிச்சாமி சொன்ன அந்த வார்த்தை..! - Seithipunal
Seithipunal



துபாயில் நடந்துவரும் கார் பந்தயத்தின் 24H சீரிஸ் நடிகர் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. 

களத்திலேயே இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து நடிகர் அஜித் குமார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறை மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அதில், "துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் 3-வது இடத்தைப் பிடித்துள்ள முன்னணி நடிகர், அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்கள் தலைமையிலான அஜித் குமார் ரேசிங் அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக திமுக இலைஞரணி செயலாளர், துணை முதல்வர் உதயநிதி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi palanisamy wish Ajithkumar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->