கன்னிவெடியில் சிக்கி, காலை இழந்த தேனி மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் சுகுமாரன் - எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல்! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம், பழனி செட்டிப்பட்டியைச் சேர்ந்த ஆர். சுகுமாரன் மத்திய ரிசர்வ் காவல் படையில் பணியாற்றி  வருகிறார்.

இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் நக்சலைட் தீவிரவாதிகளை பிடிப்பதற்காக நடந்த தேடுதல் வேட்டையில், கன்னிவெடியில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், சுகுமாறனின் ஒரு கால் அகற்றப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் நக்சலைட் தீவிரவாதிகளை பிடிப்பதற்காக நடந்த தேடுதல் வேட்டையில் மத்திய ரிசர்வ் காவல் படையில் பணியாற்றி வரும் தேனி மாவட்டம் பழனி செட்டிப்பட்டியைச் சேர்ந்த திரு.ஆர். சுகுமாரன் அவர்கள், கன்னிவெடியில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், அவரது ஒரு கால் அகற்றப்பட்ட செய்திகேட்டு வருத்தமுற்றேன்.

நாட்டின் பாதுகாப்புக்காக களம் கண்ட அவரது வீரம் போற்றுதலுக்குரியது. அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.

அதிமுக சார்பிலும், எனது சார்பிலும் கழக அமைப்பு செயலாளரும், தேனி மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திரு. எஸ்.டி.கே. ஜக்கையன் , தேனி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முருகோடை எம்.பி.இராமர் மற்றும் கழக நிர்வாகிகள் ராணுவ வீரர்
திரு ஆர் சுகுமாரன் அவர்களின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து கழகத்தின் சார்பில் ஆறுதல் தெரிவிப்பார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS say Abput Theni Army Man Injured


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->