அதிமுக ஜெயக்குமார் வழக்கில் திடீர் திருப்பம்: சென்னை உயர்நீதிமன்றம்
ADMK EX MINISTER Jayakumar case Chennai High court
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதின்போது மனித உரிமை மீறல் நடைபெற்றதாக, அவரது மகன் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் போது, மாநில மனித உரிமை ஆணையம், ஜெயக்குமார் அளித்த புகாரை விசாரிக்காமல் முடித்து வைத்தது தவறான நடவடிக்கை என நீதிமன்றம் கண்டித்தது.
மேலும், காவல்துறைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட புகாரை விசாரிக்காமலேயே முடிவு செய்ததோடு, உண்மையான விசாரணை நடைபெறாததையும் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
இதனால், மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யும் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
English Summary
ADMK EX MINISTER Jayakumar case Chennai High court