ரூ.100 கோடி! முன்ஜாமீன் மனு! சிக்கலில் அதிமுக முன்னாள் அமைச்சர்! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை வருகின்ற 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனுவை வருகின்ற 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சுமார் 100 கோடி ரூபாய் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக எம் ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த புகார் தொடர்பாக ஏற்கனவே ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு விவரம் : 

கரூர் மாவட்டம், குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் தனது மகளுக்கு கொடுத்த 22 ஏக்கர் நிலத்தின் தானபத்திரம் தொலைந்து விட்டது என்று கூறி புகார் அளித்திருந்தார்.

மேலும், மேலக்கரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கமான வழக்கறிஞர் சங்கத் தலைவர் மாரியப்பன், செல்வராஜ், சித்தார்த்தன், ரகு ஆகியோர் பத்திரப்பதிவு செய்தது தெரியவந்துள்ளது.

இது விவகாரம் குறித்து சார்பதிவாளர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையின் கடந்த ஜூன் 9ஆம் தேதி கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில், கரூர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கின் விசாரணை ஏற்கனவே 2 முறை விசாரணைக்கு வந்த நிலையில் இன்றும் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK MR Vijayabaskar Case Karur Court


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->