அடுத்த அதிர்ச்சி.. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுக புகார்.!
admk pettition against minister sendhil balaji
அதிமுக ஆட்சியில் இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் சுமார் ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, ஜாமினில் வெளியே வந்தார்.
வந்த உடனே, மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் மீண்டும் அவர் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ரூ.400 கோடி ஊழல் செய்ததாக அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையில் 45,800 மின்மாற்றிகள் வாங்குவதற்கு, ரூ.1,182 கோடி மதிப்பில் 10 டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றாததால், அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகவே, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
admk pettition against minister sendhil balaji