எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது!...விஜய்க்கு பாடம் எடுத்த அமைச்சர் ரகுபதி!
Everyone cannnot be mgr minister ragupathi took a lesson from vijay
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பி வந்தாலும், எந்த மாற்றமும் ஏற்பட போவது இல்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலதித்து பேசினார்.
அதன் படி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பி வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்பட போவது இல்லை என்றும், எம்.ஜி.ஆர் பாணியை விஜய் பின்பற்ற பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என்றும், சர்வாதிகாரிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று கூறிய அவர், அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.
இதற்கிடையே, திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது குறித்து பேசிய சீமான், ஒரு நேர்மையாளர் சர்வாதிகாரியாகத்தான் இருக்க முடியும் என்றும், சர்வாதிகாரம் இல்லாது எந்த செயலையும் சரி செய்ய முடியாது என்று கூறியிருந்தார் குறிப்பிடத்தக்கது.
English Summary
Everyone cannnot be mgr minister ragupathi took a lesson from vijay