இளைஞர் மரணம் - கிண்டி மருத்துவமனை பரபரப்பு விளக்கம்! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற இளைஞர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனால் அவரது உறவினர்கள் இளைஞருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும், இளைஞர் உயிரிழந்ததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் மருத்துவமனை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  இளைஞர் விக்னேஷ் உயிரிழந்தது குறித்து மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை அளித்துள்ள விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இளைஞர் விக்னேஷ் உடல் மோசமடைந்ததை அடுத்து அவரை அவசர பிரிவிற்கு மாற்றி உயர் சிகிக்சை அளித்தோம் என்றும், தெடர்ந்து சிகிக்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த விக்னேஷ்க்கு முறையான அனைத்து சிகிக்சைகளும் வழங்கப்பட்டதகாக கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth death guindy hospital sensational explanation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->