நிற்க கூட இடமில்லை!...திருவண்ணாமலை கோவிலில் கடும் நெரிசல்!...நகர முடியாமல் நிற்கும் பக்தர்கள்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஆன்மீகத் தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.

மேலும், கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதை உள்ளது. இங்கு மாதம்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்திற்கு செல்கின்றனர்.

இந்த நிலையில் ஐப்பசி மாத பெளர்ணமி இன்று அதிகாலை தொடங்கி நாளை அதிகாலை வரை உள்ளது. இதனால் திருவண்ணாமலை   அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்வதற்கு காலை முதலே பக்தர்கள்  வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு சுவாமி தரிசனம்  செய்யும்  பக்தர்கள், தேரடி வீதியில் சுமார் அரை கீலோ மீட்டருக்கு வரிசையில் கூட்டமாக நிற்கின்றனர்.

மேலும், பக்தர்கள் கூட்டம் காரணமாக நகர முடியாமல் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நிற்கின்றனர்.  இந்த கூட்ட நெரிசலை சமாளிப்பதற்கு முறையான ஏற்பாடு செய்யவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கிடையே, கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There is no place to even stand heavy congestion in tiruvannamalai temple devotes standing unable to move community verified icon


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->