அடையாறு கூவம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கூவம் மற்றும் அடையாறு  ஆற்றின் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-173, திரு.வி.க. மேம்பால ஆற்றங்கரை பகுதியில் ரூ.11.20 கோடி மதிப்பில் புதிதாக தடுப்பு வேலி மற்றும் தாவரங்களை நடவு செய்யும் பணிகளையும், ரூ.11.40 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூங்கா, விளையாட்டுத்திடல் ஆகிய பணிகளையும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  மேலும், அங்குள்ள பூங்காவில் கூடுதல் கழிப்பிட வசதிகளை அமைத்திடவும் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் வார்டு-173ல் ரூ.11 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் நீரேற்று நிலையத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-59, நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஆற்றங்கரை பகுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு தூர்வாருதல், திடக்கழிவு அகற்றுதல், பாதுகாப்பு வேலி அமைத்தல், தாவரங்கள் நடவு செய்தல், பூங்கா அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை முதன்மைச் செயலாளர்/உறுப்பினர் செயலாளர் மருத்துவர் சீ.ஸ்வர்ணா, இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர்கள் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., (பணிகள்) அவர்கள், திரு.விஷூ மஹாஜன், இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி) அவர்கள், டாக்டர் எஸ்.மனிஷ், இ.ஆ.ப., (சுகாதாரம்) அவர்கள், திருமதி டி.சினேகா, இ.ஆ.ப., (கல்வி) அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adyar restoration work


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->