ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய அக்னி தீர்த்தக்கடல்!! - Seithipunal
Seithipunal


மன்னார் வளைகுடா பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடல் திடீரென உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமிகள் திருக்கோவிலில் நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாட்டிலிருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அம்மாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களை வழிபடுவது வழக்கம்.

 ராமேஸ்வரம் ராமநாத திருக்கோயிலில் மற்ற நாட்களை விட அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். கோடை விடுமுறை மற்றும் பள்ளிகள் விடுமுறையில் இருப்பதால் ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் குவிந்து வருகின்றனர்.

 இந்த நிலையில் இன்று அமாவாசையை முன்னிட்டு நேற்று முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். அதிகாலை முதலே அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து நீராடி வருகின்றனர்.

 மிகுந்த நிலையில் மன்னாரு வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீர்மட்டம் தரையில் இருந்து 150 மீட்டர் உள்வாங்கி பாறைகள் தென்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Agni Theerthakadal suddenly absorbed in Rameswaram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->