திடீர் திருப்பம்! அதிமுக நிர்வாகி கொலை வழக்கு! திமுக பெண் கவுன்சிலர் தலைமறைவு!
AIADMK executive murder case DMK woman councilor goes into hiding
சேலம் : அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள திமுக பெண் கவுன்சிலரை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சேலம் தாதகாப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளர் பதவி வகித்து வந்துள்ளார். கடந்த 3ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன் இரண்டு இருசக்கரவாகனத்தில் வந்த மர்ம கும்பல் சண்முகத்தை வெட்டி கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் தனலட்சுமி என்பவரின் கணவர் சதீஷ்குமார் உட்பட 10 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தடை செய்யப்பட்ட லாட்டரிகளை சதீஷ்குமார் விற்பது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளிட்ட காரணங்களால் சண்முகம் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த கொலையில் திமுக கவுன்சிலர் தனலட்சுமி மற்றும் தாதகாப்பட்டியை சேர்ந்த கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன், அஜித் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் 4 பேரும் தலைமறைவாக உள்ளனர்.
அவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். அதே நேரத்தில் போலீசாரின் இன்னொரு தனிப்படை ஊட்டிக்கு விரைந்து மற்றவர்களை தேடி வருவதாக கூறப்படுகிறது.
English Summary
AIADMK executive murder case DMK woman councilor goes into hiding