தவறான செய்தி | எடப்பாடி பழனிசாமிக்கு, நடிகர் அஜித்குமார் வாழ்த்து சொல்லவில்லை! அதிமுக தரப்பில் மறுப்பு! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர் அஜித்குமாருக்கு போன் மூலம் தொடர்புகொண்டு, அஜித்தின் தந்தை மறைவுக்கு ஆறுதல் தெரிவித்து உள்ளார்.

அப்போது அதற்க்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்குமார், பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளதாக செய்தி ஊடங்கங்களில் செய்திகள் வெளியாகின.

சமூகவலைத்தளங்களில் இந்த செய்தியை நடிகர் அஜித்குமாரின் ரசிகர்களும், அதிமுக ஆதரவாளர்களும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தவறான செய்தி என்று அதிமுகவின் மதுரை மண்டல ஐடி விங்க் செயலாளர் ராஜ் சத்யன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மரியாதைக்குரிய திரு அஜித்குமார் தந்தை இழந்து  துக்கம் அனுஷ்டிக்கும் வேளையில் இது போன்ற  செய்திகளுக்கு அவரை பதிலளிக்க வைக்காதீர்கள்

ஊடகங்கள் சற்று கவனத்துடன் செயல்பட்டால் நல்லது." என்று அதில் ராஜ் சத்யன் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK IT WING Madurai Zone raj satyan say about ajithkumar wish news


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->