வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் மழை பெய்யுமா?
air low pressure formed in bay of bengal
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று இரவு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி, அதற்கடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில், தமிழகம்-இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் வருகிற 15-ந் தேதி வரையில் லேசான மழை பெய்யும். கடலோர தமிழகம், உள் தமிழகத்தில் நாளை இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதே சமயம், இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
air low pressure formed in bay of bengal