தமிழில் முதல் ஞானபீட விருது பெற்ற அகிலன் பிறந்த தினம்.!!
akilan birthday 2022
அகிலன் :
தமிழில் முதல் ஞானபீட விருது பெற்ற அகிலன் 1922ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் பி.வி.அகிலாண்டம்.
சுதந்திரப் போராட்ட வீரர், புகழ்பெற்ற புதின ஆசிரியர், நாடகாசிரியர், சிறுவர் நூலாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், கட்டுரையாளர் என இவருக்கு பல முகங்கள் உண்டு.
வேங்கையின் மைந்தன் என்ற நாவல் 1963ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதையும், சித்திரப்பாவை 1975ஆம் ஆண்டு ஞானபீட விருதையும் பெற்றன. இவரின் பல படைப்புகள் தமிழக அரசு விருதுகளைப் பெற்றுள்ளன.
தமிழ் இலக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய அகிலன், 1988ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள் :
1838ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வந்தே மாதரம் பாடலை இயற்றிய பங்கிம் சந்திர சட்டர்ஜி பிறந்தார்.
1859ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி ஹேப்பி பர்த் டே டூ யூ பாடலை இயற்றிய மில்ட்ரெட் ஜே.ஹில் அமெரிக்காவில் பிறந்தார்.
2007ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைக்கலைஞரான டி.எம்.தியாகராஜன் மறைந்தார்.
1998ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.