எடப்பாடி பழனிச்சாமிக்கு எதுவும் தெரியாது! கூட்டணி வேறு காவேரி விவகாரம் வேறு - அமைச்சர் துரைமுருகன்! - Seithipunal
Seithipunal


காட்பாடி : காவிரி விவகாரம் குறித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதுவும் தெரியாது என நீர் வளத்துறை அமைச்சர் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் தெரிவித்ததாவது,

தமிழகத்திற்கு தினசரி ஒரு டி.எம்.சி தண்ணீரை திறக்க காவேரி  நதிநீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடகா அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி 8000 கனஅடி மட்டுமே விடப்படும் என்று தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் உத்தரவுக்கு பின்னரும் தண்ணீரை தர மறுக்கிறார்கள். தமிழக முதலமைச்சருடன் கலந்து பேசி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதா? அல்லது கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதுவதா? என்பதை குறித்து இன்று முடிவு செய்வோம்.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது மட்டும் கர்நாடக அரசு காவிரி தண்ணீரை திறந்தா விட்டது. தற்போது 4 அணைகளிலும் போதிய நீர் இருப்பு இருந்தும் அவர்கள் அலட்சியம் காட்டுகிறார்கள். காவிரி பிரச்சினை காலம் காலமாக உள்ள பிரச்சினை தற்போது இது குறித்து கவனம் செலுத்தி வருகிறோம்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு இது பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா அரசு மதிக்கவில்லை நாம் என்ன செய்வது. கூட்டணி வேறு காவேரி விவகாரம் வேறு என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Alliance is different Cauvery issue is different Minister Durai Murugan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->