தூத்துக்குடியில் விசிக சமத்துவ அணிவகுப்புடன் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை!
Ambedkar statue honoured with VCK equality parade in Thoothukudi
தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தும், தேர்தல் அங்கீகார வெற்றி விழா மற்றும் சமத்துவ நாள் உறுதி ஏற்பு அணிவகுப்பு காய்கறி மார்க்கெட் அண்ணா சிலை ரவுண்டானாவில் இருந்து துவங்கியது.
அணிவகுப்பானது விசிக மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ ம.கணேசன் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட செய்தி தொடர்பாளர் செல்வகுமார், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் ச.குருபிரசாத், செந்.அர்ஜுன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் ஜான்சன் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலமாக சென்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் மு.கலைவேந்தன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் இரா.தமிழ்குட்டி அணிவகுப்பில் கலந்து கொண்டார்.
பின்னர் தமிழ்ச் சாலை தென்பாகம் காவல்நிலையம் முன்புள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில துணை பொது செயலாளர் மு.கலைவேந்தன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் இரா.தமிழ்குட்டி, மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ ம.கணேசன், வடக்கு மாவட்ட செயலாளர் சு.முருகன், தெற்கு மாவட்ட பொருளாளர் சிபா.பாரிவள்ளல், உள்ளிட்டோர் மாலையணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து சமத்துவ உறுதி மொழியை விசிக நிர்வாகிகள் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டர் அணி நிர்வாகிகள் மகேந்திரன், முருகன், சமத்துவ வழக்கறிஞர் அணி செந்தில்வேல் குமார், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சித்ரா, ராணி சத்யராஜ், இஸ்லாமிய ஜனநாயக பேரவை துணை அமைப்பாளர் அஜீஸ், ஊடக மையம் முத்துக்குமார், தொழிலாளர் விடுதலை முன்னணி பாபா செல்வம், த.வில்சன், பட்டு வளவன், சமத்துவ வழக்கறிஞர் அணி சார்லஸ், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை அலெக்ஸ் பாண்டியன், அம்பேத்கர் நகர் ரஜினி மாரியப்பன், வார்டு நிர்வாகிகள் ஜேசுராஜ், ஆறுமுகம், ஜீவகனி, சரவணகுமார், மகளிர் அணி முருகேஸ்வரி, மற்றும் மத்திய, தெற்கு , வடக்கு மாவட்ட இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை, மீனவரணி, தொழிலாளர் விடுதலை முன்னணி உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
English Summary
Ambedkar statue honoured with VCK equality parade in Thoothukudi