தமிழக வேளாண் பட்ஜெட் : கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் ஊக்கத்தொகை.. அமைச்சர் அறிவிப்பு.!
An incentive of Rs. 195 per tonne of sugarcane will be given
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்குகியது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை வாசித்தார். 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழகத்தில் இரண்டாவது முறையாக வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவுக்கு ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்த 3 மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க ரூ.381 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
English Summary
An incentive of Rs. 195 per tonne of sugarcane will be given