மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!… இந்தக் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும்.! - Seithipunal
Seithipunal


அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகளில், 5 வயதை நிறைவு செய்யும் குழந்தைகளை, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறை செயலர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், "அரசு பள்ளிகளில், 2024 – 25ம் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கையை, மார்ச் 1ல் தொடங்க, விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை சேர்க்கவும், பள்ளிகளில் கிடைக்கும் நலத்திட்டங்கள், உதவித்தொகைகள் குறித்த விபரங்களை, மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும், ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.

அங்கன்வாடி மையங்களில், பள்ளி முன்பருவக் கல்வியை கற்று வருவோரில், 5 வயது நிறைவு செய்யும் குழந்தைகள் விபரம் பெற்று, அவர்களை அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும். வேறு பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளில் சேர விரும்பும் குழந்தைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில், ஒருவர் கூட விடுபடாமல், அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்க்கவும், வரும் ஆண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை கணிச மாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் சேர்க்கை பணி மற்றும் விழிப்புணர்வு சேர்க்கை பணியை, தங்கள் மாவட்டத்தில் சிறப்பாக நடத்தி, அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும், பள்ளிகளில் சேர்க்கை செய்திட, நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anganwadi childrens addmission on govt schools tn govt order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->