குழந்தைக்கு சூடு வைத்த அங்கன்வாடி ஊழியர் - திண்டுக்கல்லில் பரபரப்பு.!!
anganwadi employee attack to student in dindukal
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி அருகே சுரைக்காய்ப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜபாண்டி - சினேகா தம்பதியினர். இவருக்கு தர்ஷிகா ஸ்ரீ என்ற குழந்தை உள்ளது. இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில், வழக்கம் போல் அங்கன்வாடியில் இருந்து வீட்டுக்கு வந்த சிறுமி சற்று சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குழந்தையிடம் விசாரித்தபோது, அங்கன்வாடி ஊழியர் சிறுமிக்கு சூடுவைத்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அங்கன்வாடி ஊழியரின் வீட்டுக்கு சென்று சூடு வைத்தது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு குழந்தை சேட்டை செய்ததால் சூடுவைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் சம்பவம் குறித்து போலீசில் புகாரளித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கன்வாடி ஊழியர் குழந்தைக்கு சூடுவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
anganwadi employee attack to student in dindukal