AK GPU: அஜித் ரசிகர்களுடன் திமுக அமைச்சர்! விஜய்க்கு எதிராக தேர்தல் அரசியல்?
Good bad Ugly DMK Minister Geetha Jeevan Ajith Fans
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவான *'குட் பேட் அக்லி'* திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் வெளியானதை ஒட்டி ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல கொண்டாடினர்.
அஜித் ரசிகர்கள் நேற்று இரவே திரையரங்குகளை நோக்கி திரண்டதுடன், அவரது படப்பைனருக்கு பாலாபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
இந்நிலையில், தூத்துக்குடி கிளியோபட்ரா திரையரங்கில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை பார்வையிட அமைச்சர் ஞா. கீதா ஜீவன் வருகை தந்தார். அவரை அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று, உற்சாகம் கொள்ளும் தருணங்கள் நிகழ்ந்தன.
திரையரங்கில் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த பிரமாண்ட கேக்கை அமைச்சர் கீதா ஜீவன் வெட்டி திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து ரசிகர்களுடன் இணைந்து படம் பார்க்க அமர்ந்தார்.
அஜித் ரசிகர்களுடன் ஒருங்கிணைந்து படம் பார்வையிட்ட அவர், ரசிகர்களின் உற்சாகம் மற்றும் அஜித்தின் வெற்றி சந்தோஷத்தை நேரில் பார்த்து மகிழ்ந்தார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அஜித் ரசிகர்களின் ஆதரவை பெற அண்மை காலமாக திமுக அமைச்சர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Good bad Ugly DMK Minister Geetha Jeevan Ajith Fans