அங்கித் திவாரியின் அவசர மனு: இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல்லில் உள்ள அரசு மருத்துவரிடம்  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்றதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் முன்னதாக அங்கித் திவாரிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை அடுத்து அவர்  திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவரது ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அங்கித் திவாரிக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த மார்ச் 20-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

மேலும் உச்ச நீதிமன்றத்தில் அனுமதியில்லாமல் அங்கித் திவாரி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும், நிபந்தனை விதித்தது.

இதற்கிடையே தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்க கோரி அங்கித் திவாரி தரப்பில் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி முறையிடப்பட்டது.

தொடர்ந்து இதனை ஏற்றுக் கொண்ட  உச்ச நீதிமன்றம், அங்கித் திவாரியின் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்தது. இந்த வகையில், மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ankit tiwari urgent petition hearing in the supreme court today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->