80 பொறியியல் கல்லூரிகளுக்கு ஆப்பு.! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி.!! திண்டாடும் மாணவர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் சுமார் 430 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக் கழகத்திடம் இணைப்பு அங்கீகாரம் பெற வேண்டும் என்பது விதிமுறை. அவ்வாறு இணைப்பு அங்கீகாரம் பெற்றால் மட்டுமே அந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மற்றும் கல்லூரி தொடர்ந்து இயங்க முடியும். நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் தமிழக முழுவதும் 80 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்ட 80 கல்லூரிகளிலும் போதிய உட்கட்டமைப்பு வசதி இல்லை, போதிய பேராசிரியர்கள் இல்லை, போதிய ஆய்வக வசதி இல்லை போன்ற பல்வேறு குறைபாடுகள் உடன் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளின் இணைப்பு அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழக குழு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட பிறகு இணைப்பு அங்கீகாரம் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் வசதிகள் இல்லாத கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பிற அரசு கல்லூரிகளுக்கோ, தனியார் கல்லூரிகளுக்கோ மாற்றுவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த 80 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anna University hold 80 engineering colleges recognition


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->