கல்லூரி மாணவி பாலியல் வழக்கு - கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி.!
anna university student harassment case accuest gnasekaran admited hospital
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கடந்த 25-ந்தேதி கைது செய்தனர்.
அப்போது ஞானசேகரன் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. இதனால், அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
அதன் பின்னர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரனுக்கு அதிகாலை வலிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி ஞானசேகரன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
English Summary
anna university student harassment case accuest gnasekaran admited hospital