அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கடலூர், ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் தி.மு.கவிற்கு தேர்தலில் வாக்களித்ததால் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் காணொளி பரவியது.

இந்த சம்பவம் குறித்து கடலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இந்நிலையில் கோமதி கொல்லப்பட்ட வழக்கில், சமூக வலைதளத்தில் போலியான தகவலை பரப்பிய புகாரில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் அண்ணாமலை மீது வன்முறையை தூண்டுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, இதே பொய்ச் செய்தியை பரப்பிய சின்ஹா, ஹரி பிரபாகர், சண்முகம், ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai against case registered  


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->