அடுத்த பாஜக தலைவர் இவர் தான் - அண்ணாமலை அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சர்வதேச அரசியல் குறித்த சான்றிதழ் படிப்பில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனுக்கு செல்ல உள்ளார். 

இங்கிலாந்து நாட்டிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சான்றிதழ் படிப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள 12 அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது.

அதன் படி இந்த ஆண்டு, சான்றிதழ் படிப்புக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார். இதற்கான வகுப்பு வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் பங்கேற்க அண்ணாமலை ஒரு வாரம் முன்பு சென்னையில் இருந்து லண்டனுக்கு செல்ல இருக்கிறார். 

அண்ணாமலையின் இந்த வெளிநாடு பயணத்திற்கு பிரதமர் மோடியும் அனுமதி அளித்துள்ளார். இந்த நிலையில், வெளிநாடு செல்வது குறித்து அண்ணாமலை தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "அரசியல் படிப்பிற்காக லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு செல்கிறேன். அதற்காக 3 மாதங்கள் விடுப்பு எடுக்க உள்ளேன். இதனால், மாநில தலைமை பொறுப்பை கேசவ விநாயகம் கவனித்துக் கொள்வார்.

செப்டம்பர் 2-ம் தேதி இங்கிலாந்து நாட்டில் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் துவங்கும் வகுப்பில் பங்கேற்க உள்ளேன். நவம்பர் 2-வது வாரத்தில் இந்த வகுப்பு நிறைவு பெறும். பாஜகவில் கட்சி தலைவர் இல்லாத போதும் மற்றவர்கள் தலைவர் பணிகளை கவனிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai announce tn bjp leader kesava vinayagam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->