அமைச்சர் மாறினாலும் அவலம் மாறவில்லை.. கொந்தளிக்கும் அண்ணாமலை.!!
Annamalai condemns alcohol drinker assaulted by police
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த அணுக்கருத்தில் பணியாற்றிய இளைஞர்கள் 3 பேர் செங்கல்பட்டு மாநகரில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக்கடையில் 6 மதுபாட்டில்களை வாங்கி பைக்கில் வைத்து எடுத்து சென்றபோது அங்கு வந்த காவல் துறையினர் மது பாட்டில்களையும் அவரது இருச்சக்கர வாகனத்தையும் எடுத்து செல்ல முயன்றனர்.
இதனால் மது வாங்கியவருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு அங்கு வந்த மற்றொரு காவலர் மது பாட்டில்களுடன் இருச்சக்கர வாகனத்தையும் எடுத்து சென்றுள்ளார்.
காவலருடன் மது பிரியர்கள் வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுப்பட்டதால் எடுத்து சென்ற இருச்சக்கர வாகனத்தையும் மது பாட்டில்களையும் இளைஞர்களிடம் ஒப்படைத்தனர்.
அப்போது அங்கிருந்த ஒருவர் பொதுமக்களிடம் மட்டும் அதிகாரத்தை காட்டுவார்கள். இதோ இந்த மதுபானக்கடையில் பத்து ரூபாய் அதிகம் விற்கிறார்கள். அதை எல்லாம் அவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என மனவேதனையுடன் குமுறி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் அந்த நபரை தரக்குறைவாக திட்டியதோடு, ஒரு ரவுடியை போல் அவரை கண்டபடி அடித்து விரட்டி அடித்தார். காவலர் மது பிரியரை அடித்ததை கண்ட மற்றவர்கள் அச்சத்தில் உறைந்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் "ஆட்சியாளர்கள் தவறு செய்தால், தண்டனை மக்களுக்கு. அமைச்சர் மாறினாலும் அவலம் மாறவில்லை" என உதவி ஆய்வாளர் மது பிரியரை தாக்கும் வீடியோவை பகிர்ந்து உள்ளார்.
English Summary
Annamalai condemns alcohol drinker assaulted by police