அண்ணாமலை மீதான வழக்கு விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது, இரு மதத்தினருக்கும் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க கூடாது என கிறிஸ்தவ மிஷனரி தான் முதலில் வழக்கு தொடர்ந்தது என குறிப்பிட்டு இருந்தார். 

இது, இரு மதத்தினருக்கும் இடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாக இருப்பதாக சேலம் சுற்றுச்சூழல் ஆர்வலர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். 

இது தொடர்பாக அண்ணாமலை நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு எதிராகவும் தன் மீதான புகாரை ரத்து செய்ய வேண்டும் எனவும் அண்ணாமலை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில் தனது பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அண்ணாமலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரத்து செய்ய முடியாது என மறுத்து, அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai petition dismissed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->