அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை பரபரப்பு பேட்டி! பாராளுமன்ற தேர்தலில் இதன் முடிவு! - Seithipunal
Seithipunal


வழக்குத் தொடர்ந்தால் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய உண்மை ஆடியோவை ஒப்படைப்பேன் என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் பாஜகவின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அண்ணாமலை பேசியதாவது, "அமைச்சர் தியாகராஜன் ஆடியோ தொடர்பாக வழக்கு தொடர்ந்தால், உண்மையான ஆடியோவை ஒப்படைப்பேன். 

திமுகவுக்கு எதிரான மனநிலை மக்களின் மனநிலையை எப்படி வாக்குகளாக மாற்றுவது என்பதுதான் எங்களின் நோக்கமாக உள்ளது.

தமிழகத்தில் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக தான். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் எங்கள் கூட்டணியின் முகம் பிரதமர் மோடி தான்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும், ஜி ஸ்கொயர் தொடர்பாக வருமானவரித்துறைக்கு நான் எந்த விதமான புகார் அளிக்கவில்லை என்று கூறிய அண்ணாமலை, பரவலாக எழுந்த புகார்களின் அடிப்படையில் தான் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

அதிமுகவின் கூட்டணி குறித்து பேசிய அண்ணாமலை, வருகின்ற 2024 தேர்தல் என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கான தேர்தல். தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி. ஆனால் எங்களின் கூட்டணி தேர்தல் முகமாக பிரதமர் மோடி இருக்கிறார். 

எனக்கான பணியை பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா ஆகியோர் கொடுத்துள்ளனர்.

ஊழலைப் பொருத்தவரை என்னுடைய நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிந்துவிட்டேன். ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிரானவர்கள் நாங்கள். யார் ஊழல் செய்தாலும் நாங்கள் அவர்களுக்கு எதிராக இருப்போம்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai Say About ADMK And Election 2024 a


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->