டிஆர் பாலு இப்படி பட்டவரா? மன்மோகன் சிங்கே போர்க்கொடி தூக்கும் அளவுக்கு ஊழலா?! அண்ணாமலை பகீர் பேட்டி! - Seithipunal
Seithipunal


தன மீது அவதூறு வழக்கு தொடர்ந்த திமுக எம்பி டிஆர் பாலுவிற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரு கேள்விகளை எழுப்பியுள்ளார். 

இதுகுறித்த அவரின் பேட்டியில், "டிஆர் பாலு அண்ணன் இன்று காலை என்னைப் பற்றி சில கருத்துக்களை பேசி இருப்பதாக தெரிய வருகிறது. டிஆர்பாலு அண்ணன் அவர்களுக்கு இரண்டு கேள்விகளை நான் முன் வைக்கிறேன்.

23 ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் டிஆர்பாலு அவர்களை எதிர்த்து அதிமுக ராஜ்யசபா எம்பி திரு மைத்ரேயன் அவர்கள் ஒரு கேள்வி எழுப்புகிறார்.

அதில், 'ஓஎன்ஜிசி, கெயில் இந்த இரண்டு நிறுவனங்கள், காவிரி டெல்டா பகுதியில் இருந்து வரக்கூடிய கேஸ்-யை டிஆர் பாலு அவர்கள் தன்னுடைய சொந்த நிறுவனத்திற்கு குறைந்த விலையில் கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தித்து இருக்கிறார் அவருடைய கிங்ஸ் இந்தியா கெமிக்கல், கிங்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேஷன் இந்த இரண்டு நிறுவனத்திற்கும், அவர் துறையை சார்ந்த ஓஎன்ஜிசி, கெயில் நிறுவனங்கள் காவேரி டெல்டா பகுதியில் எடுக்கக்கூடிய கேஸை குறைந்த விலைக்கு கொடுக்க வேண்டும் நிர்பந்தித்தாக ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.

அதற்கு பதில் அளித்த டி ஆர் பாலு, இந்த நிறுவனங்களை மூடாமல் இருப்பதற்காக நிறைய பேர் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். அதன் காரணமாக பெட்ரோலிய துறை அமைச்சகத்திடம் ஒரு வார்த்தை கூறினேன் என்கிறார்.

ஆக, அமைச்சராக இருக்கும்போதே தன்னுடைய பதவியை தவறாக பயன்படுத்தியவர் டி ஆர் பாலு. இவர் என் மீது ஒரு அவதூறு வழக்கை பதிவு செய்திருப்பது நகைப்புக்குறியாததாக உள்ளது. 

இதையும் தாண்டி மன்மோகன் சிங் அவர்கள் 2009 ஆம் ஆண்டு வந்த காங்கிரஸ் ஆட்சியில், என்னுடைய அமைச்சரவையில் எந்த காரணத்தை கொண்டும் டிஆர் பாலுவை சேர்த்துக் கொள்ள மாட்டேன். அவர் நிச்சயமாக என்னுடைய அமைச்சரவையில் அவர் இருக்கக் கூடாது என்று போர் கொடி தூக்கி உள்ளார். கிட்டத்தட்ட ஊழல், நிறைய நிறுவனங்கள் நடத்தியதற்காக நடத்தி இருக்கிறார். 

அதனால் டி ஆர் பாலா அண்ணனுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இன்னும் உங்கள் மீது வைக்கின்ற குற்றச்சாட்டு அதிகமாக தான் இருக்குமே தவிர, குற்றச்சாட்டு வைப்பது ஒரு சதவீதம் கூட குறையாது என்பதை டிஆர் பாலு மற்றும் அவரின் குடும்பத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், கடந்த முறை (2006 முதல் 2011 வரை) திமுக ஆட்சி செய்த போது டிஆர் பாலு அவர்கள் புதிதாக ஒரு சாராய ஆலையை திறப்பதற்காக தஞ்சை வடசேரி பகுதியில் கருத்து கேட்டு கூட்டம் நடைபெற்றது. அது பெரிய கலவரத்தில் முடிந்தது. நிறைய பேருக்கு மண்டை உடைய பட்டு, கைது நடவடிக்கை எல்லாம் செய்யப்பட்டது. இன்றுமே வடசேரி பக்கம் நீங்கள் சென்றால், அதனை கருப்பு தினம் என்று சொல்வார்கள். 

ஒரு பக்கம் தன்னுடைய குடும்பத்தினுடைய வளர்ச்சி, இன்னொரு பக்கம் தான் செய்திருக்க கூடிய ஊழல் வெட்ட வெளிச்சமாக இருந்தாலும் கூட, இன்று அவர்கள் தான் எதுவும் செய்யவில்லை, வெறும் குற்றச்சாட்டு மட்டும் வைத்திருக்கிறது என்று சொல்வது பொய். அதேபோல அண்ணன் டி ஆர் பாலு அவர்கள் இன்று பேசி இருக்கிறார்கள் நான் சொன்ன நிறுவனங்கள் தப்பு என்று, உங்களுக்கும், உங்களின் குடும்பத்துக்கும் அந்த நிறுவனத்தில் ஷேர் இல்லை என்று நீங்கள் சொல்லலாமே தவிர, நான் சொல்லியது தவறு என்று சொல்லக்கூடாது" என்று அண்ணாமலை தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai Say about TR Balu And some issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->