பஞ்சு மிட்டாய்க்கு தடை... டாஸ்மாக் கடைகளில் 'சத்து டானிக்' விற்பனையா? - பொங்கியெழுந்த அண்ணாமலை!
Annamalai speech issue
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்று செங்கல்பட்டு, மறைமலை நகரில் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை தொடங்கினார்.
பிரச்சார வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடையே பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் ஆட்சியில் மோசமாக இருந்த இந்திய பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக உழைத்து நேர்மையான முறையில் இந்தியாவை 5வது பெரிய பொருளாதார நாடாக உருவாக்கியுள்ளார்.
பா.ஜ.க வின் 295 தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தாக்கல் செய்து பட்ஜெட் ஒரு டப்பிங் படம் போல் உள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு மாநில அரசு தமிழில் என்ன பெயர் வைக்கலாம் என்பதே இந்த பட்ஜெட்டில் உள்ளது.
கடந்த 33 மாதங்களாக தி.மு.க ஆட்சியில் எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களும் பணிகளும் செயல்படவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை திமுக 20 சதவீதம் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆனால் முதல்வர் கனவு உலகில் வாழ்வது போல் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் புற்றுநோயை ஏற்படுத்தும் வண்ண பஞ்சமிட்டாய்க்கு தடை விதித்துள்ளார். அதுபோல தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் சத்து டானிக் விற்பனை செய்யப்படுகிறதா, இதற்கு ஏன் தடை விதிக்கவில்லை. மதுவுக்கு தடை விதிப்பார்களா?
தமிழக அரசு 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு வாங்கியதாக தெரிவிக்கிறது. ஆனால் டிஎன்பிஎஸ்சி மூலம் 10,600 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.